Home Local news ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக கூறி தங்க நகைகள் கொள்ளை! மாத்தளையில் சம்பவம்

ஓய்வூதியம் பெற்றுத் தருவதாக கூறி தங்க நகைகள் கொள்ளை! மாத்தளையில் சம்பவம்

ஓய்வூதியத்தைப் பெற்றுத் தருவதாகக் கூறி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தளை பிரதேச செயலகத்தில் ஓய்வூதிய பிரிவில் பணி புரிபவர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இருவரே அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டுக்குச் சென்று கொள்ளையடித்துள்ளனர்.

குறித்த நபர்களால் 4 தங்க வலையல்கள் கொள்ளையிடிப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய மாத்தளை குற்ற விசாரணைப் பிரிவினரால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய இந்தச்சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 30 பவுண் தங்க ஆபரணங்கள் , 362 500 ரூபா பணம் , கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் , போலியான தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டு மாத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவிசாவளை, மாவத்தகம, பண்ணல, நாரம்மல, மல்வத்துஹிரிபிட்டி, தங்கொட்டுவ, ஹோகந்தர, கொஸ்கம மற்றும் கிரிஉல்ல உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35, 38, 40 மற்றும் 48 வயதுடைய மினுவாங்கொடை, நீர்கொழும்பு மற்றும் திவுலப்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் நேற்று (07) மாத்தளை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட துயர சம்பவம்!
Previous articleபாடசாலைகளில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்
Next articleஹீரோயினாக மாறும் அஜித்தின் ரீல் மகள் அனிகா