Home Astology இன்றைய ராசி பலன் – 09.12.2021

இன்றைய ராசி பலன் – 09.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 23 ஆம் தேதி டிசம்பர் 09,2021 வியாழக்கிழமை. சஷ்டி திதி இரவு 07.54மணி வரை அதன் பின் சப்தமி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 09.50 மணிவரை அதன் பின் சதயம். சந்திரன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று மன உறுதியோடு எந்த பிரச்சினைகளையும் எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

கடகம்

கடகம்

சந்திரன் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 15.12.2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். திடீர் வருமானம் வரும். இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளி வட்டார நட்பு சிறப்பாக இருக்கும்.

கன்னி

கன்னி

சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

துலாம்

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். வியாபார ரீதியாக பண நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

தனுசு

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும். உறவினர்கள் வருகை மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 26/01/2022, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
மகரம்

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதாரம் சுமாராக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் அதிகரிக்கும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தொடங்க உகந்த நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடையலாம். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவி கிடைக்கும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇராணுவ ஹெலிகொப்டர் விபத்து; 7 பேர் உடல்கள் மீட்பு!
Next articleவீதிகளில் துப்பினால் கடும் நடவடிக்கை; நடைமுறைக்கு வரும் சட்டம்.