Home Ampara news மருதமுனையில் கரையொதுங்கிய மனித எச்சம்!

மருதமுனையில் கரையொதுங்கிய மனித எச்சம்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மருதமுனை பொலிஸ் பிரிவில் இன்று (8) காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து அங்கு சென்ற கல்முனை  பொலிஸார் சடலம் குறித்து ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலம் மீட்கப்பட்ட மருதமுனை கடற்கரை பகுதிக்கு பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். மேலும் குறித்த சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தலைதெறிக்க ஓடிய மரக்கறி வியாபாரிகள்; யாழில் சம்பவம்.
Previous articleஎரிவாயு சிலின்டர்களை மீளப்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
Next articleவிஜய் டிவி சீரியல் நடிகை வெட்டிங் போட்டோஸ்