Home cinema news விஜய் டிவி சீரியல் நடிகை வெட்டிங் போட்டோஸ்

விஜய் டிவி சீரியல் நடிகை வெட்டிங் போட்டோஸ்

விஜய் டிவி சீரியலில் நாயகியாக நடித்து வரும் தொகுப்பாளினி நட்சத்திரா தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இவரது ப்ரீ வெட்டிங் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது விஜய் டிவி சீரியல் நடிகர்களின் திருமண சீசன் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து பல விஜய் டிவி பிரபலங்களுக்கு திருமணம் நடந்து வருகிறது.அடுத்தது பல பிரபலங்கள் திருமண பந்தத்தில் இணைந்து வரும் நிலையில், அடுத்ததாக தற்போது ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்து வரும் நட்சத்திரா திருமணத்திற்கு தயாராகியுள்ளார்

தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனம் கவர்ந்த “நட்சத்திரா” சன் டி.வி.யில் குஷ்புவுடன் நடித்த லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக புகழ் பெற்றார். அதில் பஞ்சுமிட்டாய் என்ற அவருடைய பட்டப்பெயர் ரசிகர்களை கவர்ந்தது.சின்னத்திரை, பெரியத்திரை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார்.

vijay tv serial fame nakshathra pre wedding photo gallery goes viral

இவர் ஏற்கனவே தன்னுடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்திய இவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.எனவே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டில் பிஸியாகியுள்ளார் நட்சத்திரா. அந்த வகையில் மெரூன் கலர் ஷராரா அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.கியூட் புன்னகையோடு, நட்சத்திரா எளிமையான மேக்கப் போட்டு… ரசிக்க வைத்துள்ளார். இவரது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள்.

vijay tv serial fame nakshathra pre wedding photo gallery goes viral

மேலும் நலங்கு சடங்குகள் துவங்கியுள்ள நிலையில், எப்போது திருமணம் நடைபெறும் என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

vijay tv serial fame nakshathra pre wedding photo gallery goes viral

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ஐ.நாவில் இலங்கைக்கு இம்முறை கிடுக்குப்பிடி!
Previous articleமருதமுனையில் கரையொதுங்கிய மனித எச்சம்!
Next articleதலையில் தேங்காயினால் அடித்த கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!