Home Astology இன்றைய ராசி பலன் – 08.12.2021

இன்றைய ராசி பலன் – 08.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 22 ஆம் தேதி டிசம்பர் 08,2021 புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.26மணி வரை அதன் பின் சஷ்டி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு 10.39 மணிவரை அதன் பின் அவிட்டம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறப்பான நாளாக அமைந்துள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெற அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று செலவுகள் அதிகரிக்கும். குருவின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன்,சனி கூடியிருப்பதால் இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் வீண் வாக்குவாதம் தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- மகர ராசி
கடகம்

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்திரனின் பார்வை பலத்தால் இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். திருமணம் உள்ளிட்ட சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திடீர் பணவரவால் கடன் பிரச்சினை நீங்கும்.

சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும். திடீர் தனவரவு உண்டாகும். பொருளாதாரத்தடைகள் நீங்கும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குருவின் பார்வையால் பணவரவு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 17.11.2021
விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் நன்றாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.

தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். பணப்பிரச்சினை குறையும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் இன்று நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. வருமானம் அதிகரிக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெளியூர்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாள். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் சனியோடு இணைந்து இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு உத்தியோக ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மனதில் அமைதி அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி லாபமும் வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - மீன ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇணையத்தை கிடுகிடுக்க வைத்த ராஷ்மிகா
Next articleஉயிருடன் இருக்கும் ஏ.ஜே. எம். முஸாமிலுக்கு அஞ்சலி செலுத்தியதால் சர்ச்சை!