Home Local news பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியான தகவல்

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியான தகவல்

பாகிஸ்தானின் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது பூதவுடல் இன்று கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலை ஒன்றின் பொது முகாமையாளரான பிரியந்த குமார கடந்த வாரம், பாகிஸ்தானில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவரது பூதவுடல் நேற்று (06) பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது படுகொலை இலங்கை முழுவதும் மட்டுமல்லாது உலகள்வில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி – மேலும் 26 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று
Previous articleகாதலித்து திருமணம் செய்த அக்காவின் தலையை துண்டித்த 17 வயது தம்பி
Next articleகாதலர் தினத்தில் காதலர்களுக்கு விசேட பரிசு: அரசாங்கம் அறிவிப்பு.