Home Astology இன்றைய ராசி பலன் – 07.12.2021

இன்றைய ராசி பலன் – 07.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 21 ஆம் தேதி டிசம்பர் 07,2021 செவ்வாய்க்கிழமை. சதுர்த்தி திதி இரவு 11.41மணி வரை அதன் பின் பஞ்சமி திதி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 12.11 மணிவரை அதன் பின் திருவோணம் நட்சத்திரம். சந்திரன் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் உங்க ராசிக்கு சாதகமான வீடுகளில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் உதவியும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் லாபம் அதிகரிக்கும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம். வெற்றிகள் தேடி வரும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்குள் நுழைகிறார். இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திடீர் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வெளி இடங்களில் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.

கடகம்

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் கூடி இருப்பீர்கள். இன்றைக்கு பணம் அபரிமிதமாக வரும் கடன் பிரச்சினை தீரும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். எதையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 21.11.2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களால் மனதில் மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும்.

கன்னி

கன்னி

சந்திரன் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை நீங்கும். சொந்த பந்தங்களின் உதவி கிடைக்கும்.

துலாம்

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுத்த காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 05.12.2021
தனுசு

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெய்திகள் தேடி வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை.

மகரம்

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலைபளு அதிகரிக்கும். வீட்டில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன நிம்மதி அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பதவிகள் பொறுப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மீனம்

மீனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையாட்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் திடீர் வருமானம் அதிகரிக்கும். இன்று நீங்கள் எந்த செயலிலும் கவனமாக இருப்பது நல்லது. சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறையை சமாளிக்க முடியும். கடன் பிரச்சினை நீங்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleகல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Next article2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகள் நிர்மானம்;பிரதமர்