Home Local news பாகிஸ்தான் சம்பவத்தையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பாகிஸ்தான் சம்பவத்தையடுத்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இலங்கையில் உளவுத்துறையினர் உசார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை மையப்படுத்தி குறுகிய நோக்கங்களுக்காக அசம்பாவிதங்களை தோற்றுவிக்க எவரேனும் முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில், உளவுத்துறையினர் ஊடாக உரிய தகவல்களைப் பெற்று, அவ்வாறான நாசகார செயல்களை முறியடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு விசேட அறிவுத்தலை விடுத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட இலங்கை முகாமையாளர் பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) நாட்டுக்கு எடுத்து வரப்படும் நிலையில், குறுகிய சிந்தனை கொண்டவர்கள் நாசகார செயல்களில் ஈடுபட முயல்கின்றனரா என்பதை உளவுத் துறையூடாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு கண்டிப்பான ஆலோசனையை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாடு தழுவிய முடக்கல் தொடர்பாக; இராணுவ தளபதி.
Previous articleஇலங்கை 35000 கண்களை வழங்கியது; பாகிஸ்தான் மருத்துவர் நியாஸ் ப்ரோஹி
Next articleநான் மிகமிக துணிச்சலான பெண்: சோனியா அகர்வால்!