Home Astology இன்றைய ராசி பலன் – 06.12.2021

இன்றைய ராசி பலன் – 06.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 20 ஆம் தேதி டிசம்பர் 06,2021 திங்கட்கிழமை. திருதியைத் திதி இரவு 02.32மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. பூராடம் நட்சத்திரம் இரவு 02.19 மணிவரை அதன் பின் உத்திராடம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்பட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும். தொழில் ரீதியான புதிய முயற்சிகளில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி லாபம் கிடைக்கும். வேலையில் இதுவரை இருந்த சிக்கல்கள் விலகும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும். தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நகை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும்.

கடகம்

கடகம்

சந்திரன் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன் பாக்கிகள் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும் கடன் பிரச்சினைகள் தீரும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 19/07/2020
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும்.

கன்னி

கன்னி

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வண்டி வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வீட்டில் அமைதி குறையும். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டாகும். கடன்கள் குறையும். தேவைகள் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

துலாம்

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களினால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கவனமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 22.10.2021
தனுசு

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் திடீர் மாற்றங்கள் வரும்.

மகரம்

மகரம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத்தை சிக்கனமாக செலவு செய்யவும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் மறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை விசயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதைக் கூடும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- கடக ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஊழியர்களுக்கான பதவிகளை குடும்பத்திற்குள் பகிர்ந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Next articleஇலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்