Home Astology இன்றைய ராசி பலன் – 05.12.2021

இன்றைய ராசி பலன் – 05.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 19 ஆம் தேதி டிசம்பர் 05,2021 ஞாயிற்றுக்கிழமை. பிரதமைத் திதி காலை 09.26 மணி வரை அதன் பின் துவிதியைத் திதி விடிகாலை 05.51 அதன் பின் திருதியை. கேட்டை காலை 07.47 மணிவரை அதன் பின் மூலம் மறுநாள் விடிகாலை 04.54 மணிவரை அதன் பின் பூராடம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிகம், தனுசு ராசிகளில் பயணம் செய்கிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கவும்.

மேஷம்

மேஷம்

சந்திரன் ஒன்பதாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு காலை 07.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. கடந்த இரண்டு நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு செல்வீர்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருகிறார். உங்கள் ராசிக்கு காலை 07.47 மணிமுதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களிடம் பேசும் போது நிதானம் அவசியம். கோபத்தைக் கட்டுப்படுத்தவும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் குறையும். திடீரென்று பயணம் செல்வீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வருகிறார். இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படலாம். முயற்சி செய்தால் மட்டுமே எடுத்த காரியத்தில் வெற்றி காண முடியும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மனக்குழப்பம் சற்று அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 12.10.2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு வருகிறார். இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். திடீர் பண வரவால் பழைய கடன் பிரச்சினை தீரும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு பொன் நகைகள் சேர்க்கை அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். நினைத்த காரியம் நிறைவேறும்.
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்கள் உதவி வீடு தேடி வரும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். சொந்த பந்தங்களின் வரவால் மனதில் உற்சாகம் பிறக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பேச்சில் கோபம் வேண்டாம் நிதானத்தை கடைபிடிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு வருவது சிறப்பு.
இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திடீர் பணவரவு உண்டாகும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 19.10.2021
தனுசு

தனுசு

சந்திரன் உங்கள் ராசிக்குள் வருகிறார். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம்.வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் கிட்டும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்-கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபார ரீதியான கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் புதிய நபர்களால் நன்மைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். நெருங்கியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- மிதுன ராசி

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleபல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்
Next articleநிதி மோசடியில் ஈடுபட்ட ஆணையாளருக்கு இடமாற்றம்