Home Astology இன்றைய ராசி பலன் – 04.12.2021

இன்றைய ராசி பலன் – 04.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 18 ஆம் தேதி டிசம்பர் 04,2021 சனிக்கிழமை. அமாவாசை திதி பகல் 04.56 மணி வரை அதன் பின் பிரதமை திதி. அனுஷம் பகல் 10.47 மணிவரை அதன் பின் கேட்டை. சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்று எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இரவு நேர வாகன பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்து விடவும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே இருந்த நெருக்கம் அதிகரிக்கும்.
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்று ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் மனநிம்மதி உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

READ MORE >>>  மனித இனத்துக்கு பெரும் பாதிப்பு: விஞ்ஞானிகள் கவலை!
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் மறையும். முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் லாபமும் வருமானமும் அதிகரிக்கும். இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் 2ஆம் வீட்டில் சூரியன் கேது உடன் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும் நெருங்கியவர்களுடன் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வீட்டில் பேசும் போது நிதானம் தேவை. மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்று உங்கள் ராசியில் சூரியன் கேது புதனுடன் பயணம் செய்கிறார். இன்று பணவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சுபகாரிய முயற்சிகள் தொடர்பாக இன்று பேச வேண்டாம் தள்ளிப் போடவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

READ MORE >>>  சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு
தனுசு

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாளுவதன் மூலம் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலம் மனநிம்மதி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும் பாதிப்புகள் சீராகும். குடும்பத்தோடு குதூகலமாக இருப்பீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 30.10.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous article6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்
Next articleபாகிஸ்தானில் எரித்து கொல்லப்பட்ட இலங்கையர்