Home Astology இன்றைய ராசி பலன் – 03.12.2021

இன்றைய ராசி பலன் – 03.12.2021

பிலவ வருடம் கார்த்திகை 17 ஆம் தேதி டிசம்பர் 03,2021 வெள்ளிக்கிழமை.சதுர்த்தசி திதி மாலை 04.56 மணி வரை அதன் பின் அமாவாசை திதி. விசாகம் பகல் 01.44 மணிவரை அதன் பின் அனுஷம். சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலையில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரனின் பார்வை உங்கள் ராசியின் மீதுள்ள ராகுவின் மீது விழுகிறது. சந்திர மங்கள யோகம் நிறைந்த நாள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் சந்தோஷ சம்பவங்கள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும் வங்கி சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் எந்த வேலையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம் கவனம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன் பிரச்சினை நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்கள் - 11/11/2021, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு பராமரிப்பு செய்வீர்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நெருங்கியவர்களின் உதவி கிடைக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வேலை செய்யும் இடத்தில் பளு குறையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம் கவனம் தேவை. எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். வேலையில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியான வங்கி கடன்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து அமைதி நிலவும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனை கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். செய்யும் தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும்.

READ MORE >>>  விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்
தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யவும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் உடல் ஆரோக்கியம் சீராகும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். பொருளாதாரத்தில் நெருக்கடி நீங்கி கடன் பிரச்சினைகள் தீரும். இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார்.இன்று நீங்கள் நினைத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். வேலையில் கவனம் தேவை.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த இரு நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளிடம் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். முடிந்த வரை பணவிஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் ரீதியான பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 07.01.2022

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதல என்று அழைக்க வேண்டாம்: அஜித் திடீர் அறிக்கை!
Next articleதொடர் வெடிப்புகளால் விநியோகத்தை நிறுத்தியது லிட்ரோ கேஸ் நிறுவனம்