Home Local news 13 மற்றும் 9 வயது சிறுமிகளை கொடுமைப்படுத்திய மாமன் கைது!

13 மற்றும் 9 வயது சிறுமிகளை கொடுமைப்படுத்திய மாமன் கைது!

மொனராகலை- ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்டெமண்டிய பிரதேசத்தில் பாட்டியின் அரவணைப்பில் இருந்த இரண்டு பிள்ளைகளை கொடுமைப்படுத்திய, அப்பிள்ளைகளின் மாமா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

13 மற்றும் 9 வயது சிறுமிகள் இருவரையும் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில், அப்பிள்ளைகளின் தாயின் உடன்பிறந்த சகோதரனான 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமிகளின் தந்தை, தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், தாய் கொழும்பில் பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுமிகள் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையிலேயே குறித்த நபர், சிறுமிகளை கடுமையாக தாக்கி, மிளகாய்த் தூளை கரைத்து முகத்தில் ஊற்றியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மன்னார் மாவட்டத்தில் மேலும் 21 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் - வைத்தியர் ரி.வினோதன்
Previous articleபுற்று நோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் மீண்டும் சந்தையில்
Next articleபேரூந்து தரிப்பிடத்தில் ஆணொருவர் பொல்லால் தாக்கி கொலை!