Home Local news பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

பேருந்து கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எதிர்வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார்.

ஆகக் குறைந்த பேருந்து கட்டணம் 20 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

விருப்பமின்றியேனும் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து கட்டண அதிகரிப்பு குறித்த யோசனை எதிர்வரும் வாரத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடமும், போக்குவரத்து அமைச்சிடமும் முன்வைக்கப்படும் என கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  15 பேரை பலியெடுத்த பசறையில் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது!
Previous articleமலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சிசு!
Next articleவீட்டுக்குள் புகுந்த நாக பாம்பினை கையால் பிடித்த பெண்ணால் யாழில் பரபரப்பு!