Home Local news கொட்டகலையிலும் வெடித்தது!

கொட்டகலையிலும் வெடித்தது!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டகலை – பத்தனை பெய்திலி தோட்ட வீடு ஒன்றில் நேற்று (30) மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது.

கேஸ் குக்கர் வெடிப்பு மற்றும் தீப்பற்றல் காரணமாக கேஸ் குக்கர் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் கட்டமைப்பு மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.

இது தொடர்பாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தருக்கும் திம்புள்ள – பத்தனை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  பொதுமக்களை துன்புறுத்திய படையினரிற்கு நேர்ந்த கதி
Previous articleதலவாக்கலையிலும் வெடிப்புச் சம்பவம்!
Next articleமட்டக்களப்பிலும் வெடித்தது!