Home Local news தலவாக்கலையிலும் வெடிப்புச் சம்பவம்!

தலவாக்கலையிலும் வெடிப்புச் சம்பவம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று (01) பதிவாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பை பற்ற வைத்த பின்பு அதனை, அணைத்து விட்டு தான் வெளியில் சென்ற நிலையிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் எரிவாயு அடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; கிண்ணியா ஆலங்கேணியில் சம்பவம்!
Previous articleவட்டுக்கோட்டையிலும் வெடித்தது
Next articleகொட்டகலையிலும் வெடித்தது!