Home Tamil News யாழில் பாணின் விலை ரூபா 85.00

யாழில் பாணின் விலை ரூபா 85.00

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வதில்லையென   தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருடன்   இன்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் 450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனைச் செய்வதற்கும்,    ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படுவதில்லையென தீர்மானிக்கப்பட்டது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மனைவியை காணவில்லை; கண்டுபிடித்துத்தருமாறு கணவன் புகார்!
Previous articleஅம்மன் வேடத்தில் தமன்னா: வைரலாகும் புகைப்படம்!
Next articleஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி