Home world news பொலிசாரின வாகனத்துக்குள் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் கைது.

பொலிசாரின வாகனத்துக்குள் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகளின் காருக்குள் பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஒரு தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யோர்டான் நோவா எனும் ஆணும் சம்மர் வட்கின்ஸ் எனும் பெண்ணும் புளோரிடா மாநில பொலிஸ் கார் ஒன்றின் பின் ஆசனத்தில்  பாலியல் உறவில் ஈடுபட்டனர் என அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் 24 வயதானவர்கள்.

அதிகாலை வேளையில் வீதியில் சென்று கொண்டிருந்த ஆடம்பர கார் ஒன்றை பொலிஸார் நிறுத்தினர். அக்காரின் சாரதியான யோர்டான் நோவா, முறையான அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை செலுத்திச் சென்றதை பொலிஸார் கண்டறிந்தனர்.

யோர்டான் நோவாவுடன் பயணம் செய்த சம்மர் வட்கின்ஸை எரிபொருள் நிலையமொன்றில் இறக்கிவிடுவதற்கு பொலிஸார் முன்வந்தனர்.

கைது செய்யப்பட்ட யோர்டான் நோவாவும் பின்னர் அதே காரில் ஏற்றப்பட்டார்.

அப்போது காரில் வைத்து யோர்டான் நோவாவுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக சம்மர் வட்கின்ஸ் கூறினாராம். அப்படிச் செய்யக்கூடாது என தான் கூறியதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பொலிஸ் அதிகாரிகள் சிறிது நேரம் அப்பால் சென்று திரும்பி வந்தபோது மேற்படி இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதுடன் அதை வீடியோவில் பதிவுசெய்துக் கொண்டிருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதையடுத்து சம்மர் வட்கின்ஸும் கைது செய்யப்பட்டார். யோர்டான் நோவா மீதும் மேலதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

யோர்டான் நோவாவும் சம்மர் வட்கின்ஸும் முறையே டிசெம்பர் 13,  16 ஆம் திகதிகளில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நோக்கியா மொபைல் போனை விழுங்கிய நபரால் பரபரப்பு!
Previous articleநாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவக்கூடும்; ஹேமந்த ஹேரத்
Next articleவவுனியா நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மூன்று நாட்கள் கால அவகாசம்