Home Astology இன்றைய ராசி பலன் – 30.11.2021

இன்றைய ராசி பலன் – 30.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 14 ஆம் தேதி நவம்பர் 30,2021 செவ்வாய்க்கிழமை. ஏகாதசி திதி இரவு 02.14 மணி வரை அதன் பின் துவாதசி திதி. ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 08.34 மணிவரை அதன் பின் சித்திரை நட்சத்திரம். சந்திரன் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்பம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். எட்டாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. பயணங்களில் கவனமும் நிதானமும் தேவை. திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சிக்கலாம். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் துணிச்சலுடன் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மன குழப்பம் நீங்கும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் சுப செலவுகள் அதிகரிக்கும். குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். அஷ்டம சனியின் தாக்கத்தினால் சிலருக்கு மன உளைச்சல் உண்டாகும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சகோதரர்களிடம் இருந்து நல்ல செய்தி தேடி வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 11.11.2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரலாம். சுப செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் பேச்சில் கவனம் தேவை.

கன்னி

கன்னி

சந்திரன் உங்களுடைய ராசிக்குள் பயணம் செய்கிறார். உற்சாகமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியம் கைகூடும். உற்றார் உறவினர்கள் வழியாக உதவிகள் தேடி வரும். கொண்டாட்டங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

துலாம்

சந்திரன் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் செலவுகள் வரும் குடும்பத்தில் உள்ளவர்களின் அதிருப்திக்கு ஆளாகக்கூடும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் லாபம் அடையலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தொழில் ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். திருமண சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 18/10/2021, விருச்சிக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்
தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் வரும். பெற்றோர்கள், உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் உண்டாகும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் வாக்குவாதங்கள் ஏற்படும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். சுபகாரியங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்கவும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளதால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர் பதவிகள் தேடி வரும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleநாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கின
Next articleஒரே நாளில் 10 இடங்களில் எரிவாயு சிலின்டர்கள் வெடித்ததால் பரபரப்பு!