Home Local news பாலியல் சேட்டையில் ஈடுபட்டவரின் காதை அறுத்த மக்கள்; கிளிநொச்சியில் சம்பவம்.

பாலியல் சேட்டையில் ஈடுபட்டவரின் காதை அறுத்த மக்கள்; கிளிநொச்சியில் சம்பவம்.

வீட்டில் உறவினர்கள் இல்லாத சமயத்தில், 12 வயது  மதிக்கத்தக்க  மகளிடம்  சேட்டை புரிந்தவரின் காது  அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று, கிளிநொச்சி –   தருமபுரம்  பகுதியில், நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

அத்துடன், அவரது கை மற்றும்  கால் போன்ற இடங்களில் பலமாக வெட்டப்பட்ட நிலையில் தருமபுரம்  வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து  மேலதிக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக  சிகிச்சைகளுக்காக யாழ்.  போதனா வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய  சந்தேக நபரை, தருமபுரம் பொலிஸார் கைது  செய்துள்ளனர். அத்துடன்,  வெட்டப்பட்ட வாளையும்  மீட்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயில் மோதி கோர விபத்து! ஒருவர் பலி
Previous articleபல குமிழ்களை விடும் சிலிண்டர்கள்
Next articleஎரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பது ஏன்…? இவற்றிலிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?