Home Local news 5ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்

5ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்

நுவரெலியாவில் பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றின்  ஐந்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒருவர், அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் குறித்த ஹோட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த    இரண்டு பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய, பிரியந்த எட்டியாராச்சி என தெரிவித்துள்ள பொலிஸார், இவர் தவறி விழுந்த போது, மது போதையில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  விளையாட்டு நடுவரான இளைஞன் யானை தாக்கி பலி
Previous articleமுன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு
Next articleபல குமிழ்களை விடும் சிலிண்டர்கள்