Home world news 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையான ஆடு!

30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனையான ஆடு!

அவுஸ்திரேலியாவில் ஆடு ஒன்று 21,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு (சுமார் 30 இலட்சம் ரூபா) விற்பனையாகியுள்ளது.

மாராகேஷ் எனும் இந்த ஆடு நேற்றுமுன்தினம் புதன்கிழமை, நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் கோபர் நகரில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

அண்ட்ரூ மோஸ்லி என்பவரை இந்த ஆட்டை வாங்கினார். அவுஸ்திரேலியாவில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இதுவாகும். இதற்கு முன்னர்  கடந்த மாதம் 12,000 டொலர்களுக்கு ஆடு ஒன்று விற்பனையாகியமையே சாதனையாக இருந்தது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கல்லறைக்கு அருகில் எலும்புக்கூடுடன் நடனம் ஆடிய பெண் கன்னியாஸ்திரியால் பரபரப்பு!
Previous articleசமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு; கிண்ணியா ஆலங்கேணியில் சம்பவம்!
Next articleமுன்னாள் அரசியல் கைதிக்கு அழைப்பு