Home Astology இன்றைய ராசி பலன் – 29.11.2021

இன்றைய ராசி பலன் – 29.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 13 ஆம் தேதி நவம்பர் 29,2021 திங்கட்கிழமை. தசமி திதி மறுநாள் விடிகாலை 04.14 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி. உத்திரம் இரவு 09.41 அதன் பின் ஹஸ்தம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவு வரும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளைச் செய்யலாம் வெற்றி உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் நெருங்கிய உறவினர்களின் உதவி கிடைக்கும். பொருளாதார ரீதியான நெருக்கடிகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆலய வழிபாடு மன அமைதியைக் கொடுக்கும்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 11.10.2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவு செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும் பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு தேடி வரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். பண விசயத்தில் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும் பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். இல்லத்தரசிகளுக்கு இன்று சந்தோஷமான நாள். எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மனம் மகிழும் நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்கள் - 17/10/2021, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள்
தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வீட்டில் உறவினர்களால் மன சங்கடங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர் பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனமும் விழிப்புணர்வும் தேவை. இரவு நேரங்களில் வாகன போக்குவரத்தை தவிர்த்து விடவும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு உயர்பதவிகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். நண்பர்களின் உதவியால் இதுவரை இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

READ MORE >>>  உங்கள் ராசிக்கு இன்று வெற்றி உண்டாகும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous article12 வயது சிறுமியால் வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி; வவுனியாவில் சம்பவம்.
Next articleமதுபோதையில் குழப்பம் விளைவித்த மகனை அடித்துக் கொன்ற தந்தை