Home Astology இன்றைய ராசி பலன் – 28.11.2021

இன்றைய ராசி பலன் – 28.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 12 ஆம் தேதி நவம்பர் 28,2021.நவமி திதி மறுநாள் விடிகாலை 05.30 மணி வரை அதன் பின் தசமி திதி. பூரம் நட்சத்திரம் இரவு 10.05 அதன் பின் உத்திரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கவும்.

மேஷம்

மேஷம்

சந்திரன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை கிட்டும். இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.

கடகம்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல்நிலையில் ஏற்பட்டிருந்த நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சினைகள் நீங்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 25/06/2021, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.
சிம்மம்

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் உள்ள சந்திரன் மீது விழுகிறது.
இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சினைகள் குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - கன்னி ராசி
தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மன அமைதி குறையும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். வீட்டிற்கு உறவினர்கள் வருவது மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் வாங்கி செலவு செய்வீர்கள்.

READ MORE >>>  மிதுன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleமாவீரர் தின புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட நபர் மன்னாரில் கைது
Next articleகொழும்பு வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் இருவர் பரிதாபமாக பலி!