Home Local news கைதுகள் குறையவில்லை

கைதுகள் குறையவில்லை

சட்டமா அதிபராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் பயங்கரவாதத்
தடைச் சட்டத்தால் கைது செய்யப்படுவது குறைந்தபாடில்லை என தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வரவு -செலவு திட்டத்தின் நேற்றைய (26) குழுநிலை விவாதத்தில்
கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரிசி, உரம் தொடர்பில்
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில்,
அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான அநீதிகளை தடுக்க அவர்களால் முடியவில்லை என்றார்.
தமிழர்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல​ர் எனத்
தெரிவித்த அவர், “ஒரே நாடு, ஒரே சட்டம்” எனும் ஜனாதிபதி செயலணியின்
செயற்பாடுகள் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குமென
எச்சரித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வாழைச்சேனையில் போதை வியாபாரியுடன் 4 இளைஞர்கள் கைது
Previous articleதமிழர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்
Next article32 விதமான உருமாற்றம் அடையக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!