Home Astology இன்றைய ராசி பலன் – 27.11.2021

இன்றைய ராசி பலன் – 27.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 11 ஆம் தேதி நவம்பர் 27,2021 சனிக்கிழமை. அஷ்டமி திதி மறுநாள் காலை 06.00 மணி வரை அதன் பின் நவமி திதி. மகம் நட்சத்திரம் இரவு 09.43 மணிவரை அதன் பின் பூரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சந்திரனுக்கு குருவின் பார்வை கிடைப்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.
இன்று நீங்கள் நினைத்த காரியம் நடைபெறும். பணவரவு நன்றாக இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். வங்கி சேமிப்பு உயரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மிதுனம்

மிதுனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு அன்னிய நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கடகம்

கடகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 01.11.2021
சிம்மம்

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். உங்கள் ராசியில் உள்ள சந்திரன் மீது குருவின் பார்வை படுகிறது. இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் தொடர்புகள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.

துலாம்

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் வெற்றி கிடைக்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் அதிகரிக்கும் லாபம் கூடும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவு நன்றாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களின் உதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 15.01.2022
தனுசு

தனுசு

சந்திரன் இன்றைய தினம் ஒள்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். லாபம் அதிகரிகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

மகரம்

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வேலையில் கவனமும் நிதானமும் தேவை.

கும்பம்

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கூட்டுத்தொழில் சிறப்படையும். இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். இன்றைய தினம் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

மீனம்

சந்திரன் இன்று உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 14.12.2021

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleசிலின்டர் வெடித்ததில் 19 வயதான பெண் உயிரிழப்பு!
Next articleகொரோனா வைரஸின் புதிய திரிபு;