Home Local news பருத்தித்துறை வைத்தியசாலையில் இறந்தவருக்கு கொரோனா!

பருத்தித்துறை வைத்தியசாலையில் இறந்தவருக்கு கொரோனா!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட வயோதிபருக்குக் கோவிட் வைரஸ் தெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குச்சம் ஒழுங்கை, வல்வெட்டித்துறை, வடமராட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில், அவருக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா, விசாரணைகளை மேற்கொண்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கார் விபத்து – இருவர் படுகாயம்
Previous articleமூன்று தேங்காய்களை பறித்ததால் இருவர் கைது!
Next articleயாழில் உள்ள ஒரு தீவை சொர்க்கத் தீவாக மாற்ற யோசனை