Home Astology இன்றைய ராசி பலன் – 26.11.2021

இன்றைய ராசி பலன் – 26.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 10 ஆம் தேதி நவம்பர் 26,2021 வெள்ளிக்கிழமை. சப்தமி திதி விடிகாலை 05.43 மணி வரை அதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 08.36 மணி வரை அதன் பின் மகம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சுகமான நாள், வீடு பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க தாமதமாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிட்டும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குருவின் பார்வையால் நிதி நெருக்கடிகள் நீங்கும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 20.10.2021

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு உருவாகும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் சூரியன், கேது உடன் இணைந்துள்ளார். தொழிலில் செய்யும் புதிய முதலீடுகள் லாபத்தை தரும். இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். குருவின் பார்வையால் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 20/06/2021, மகர ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

விருச்சிகம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோக ரீதியாக பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும்.

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பு வந்து நீங்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. பண விசயங்களில் கவனம் தேவை. வெளியிடங்களில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

மகரம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் கிரகங்களால் செய் தொழிலில் லாபம் உண்டாகும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பு வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வேலை செய்யும் இடத்தில் வேலைபளு குறையும். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

கும்பம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு குடும்பத்தில் இருக்கும் மனக்குழப்பங்கள் விலகி நிம்மதி ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவுடன் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 12.11.2021

மீனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ஆலய தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஅடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள்! பீதியில் மக்கள்
Next article“அமெரிக்க டொலரின் மதிப்பு 300 ரூபாவாக உயரக்கூடும் ஆபத்து”