Home world news தன்னை தானே விவாகரத்து செய்துகொண்ட மொடல் அழகி.

தன்னை தானே விவாகரத்து செய்துகொண்ட மொடல் அழகி.

பிரேஸிலை சேர்ந்த மொடல் அழகியான கிறிஸ் கலேரா (Cris Galera) மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னைதானே திருமணம் செய்துகொண்டு பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது தன்னை தானே விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

பிரேஸிலை சேர்ந்தவர் 31 வயதான மாடல் அழகி கிறிஸ் கலேரா. கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே கிறிஸ் கலேரா திருமணம் செய்துகொண்டார்.

Cris Galera

தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய பெண்ணான் தான் தற்போதைய நிலை குறித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு செய்து தன்னை தானே திருமணம் செய்துகொண்டதாகவும் கிறிஸ் கலேரா அப்போது கூறியிருந்தார்.

Cris Galera

இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொண்ட 90 நாட்களுக்குள்ளயே தன்னை தானே விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார். மிகவும் சிறப்புவாய்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாகவும் தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரித்துள்ள அவர், விவாகரத்து செய்துகொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Cris Galera

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  3 கைதிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சிறை அதிகாரிக்கு சிறைத்தண்டனை!
Previous articleகனவில் சிவபெருமான் வந்ததால் யாழ். நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு;
Next articleதற்கொலை செய்த 17 வயது மாணவியால் யாழில் பரபரப்பு!