Home cinema news சிம்புவின் “மாநாடு” இன்று வெளியானது

சிம்புவின் “மாநாடு” இன்று வெளியானது

தீபாவளிக்கு வெளியாவதாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று (25) வெளியாகியுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25ஆம் திகதி (இன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

maanaadu-movie

இதற்கிடையில் திடீரென நேற்று மாலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகவும், வெளியாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “உங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மாநாடு நவம்பர் 25-ஆம் திகதி வெளியாகும்” என அறிவித்தார்.

மாநாடு

இதையடுத்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் ‘மாநாடு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே காத்திருந்தனர்.

இந்த நிலையில், ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

Image

Simbu's Maanaadu Movie: Release of Simbu's Maanaadu postponed; fans shocked!

SHOCKING! Simbu's Maanaadu November 25th release gets cancelled at the last moment

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தல அஜித்தின் மகள்களை பார்த்தால் சொக்கிப் போவீர்கள்!
Previous articleமனைவியை காணவில்லை; கண்டுபிடித்துத்தருமாறு கணவன் புகார்!
Next articleஇலங்கையில் ஐந்தில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்! ஆய்வில் வெளியான தகவல்