Home Local news குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோருக்கு கூட்டமைப்பு அனுதாபம்!

குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தோருக்கு கூட்டமைப்பு அனுதாபம்!

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட ஆறு பேர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தமது அனுதாபத்தை தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (24) புதன்கிழமை இடம்பெற்ற புத்தசாசன ,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்,மற்றும் கிராமிய கலைநுட்ப ,மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, அரசாங்க சேவைகள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு,மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் மீதான குழு நிலைவிவாத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை மாணவர்கள் நால்வர் உட்பட 6 பேர் மரணித்த சம்பவம் இந்த நாட்டில் மிகப் பெரிய கவலையையும் அவலத்தையும் ஏற்படுத்தியுள்ளது,

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு பிள்ளைகளுமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களும் மரணித்துள்ளனர். இது மிகவும் கவலை தரக்கூடிய சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாடாளுமன்ற வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!
Previous articleஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் மூவரும் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம்!
Next articleமனைவிக்கு காதல் பரிசாக தாஜ்மஹாலை போன்று வீடு கட்டிக் கொடுத்த கணவன்: