Home Local news முகக்கவசம் சரியாக அணியாத 9,658 பேருக்கு எச்சரிக்கை!

முகக்கவசம் சரியாக அணியாத 9,658 பேருக்கு எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, முகக்கவசங்களை சரியாக அணியாத சுமார் 10,000 பேருக்கு பொலிஸார் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மேல் மாகாணத்தில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சரியாக முகமூடி அணியாத 9,658 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், முகக்கவசம் அணியாத 4,351 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தினமும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாய்களை கடத்தி கொன்று தின்றுவந்த தம்பதியினரால் பரபரப்பு!
Previous article6 வயது சிறுமியை கடத்தி துன்புறுத்திய அயல்வீட்டு இளைஞன் கைது!
Next articleகிண்ணியா படகுப்பாதை அனர்த்தம் தொடர்பில் மூவ​ர் கைது!