Home Tamil News யாழில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு!

யாழில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலானவை என சந்தேகிக்கப்படும் வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் வடக்கு ஜே /346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் , விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்டு வந்த தென்னந் தோப்புக்குள்ளிருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணிக்குள் விடுதலைப் புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உட்பட பெருமளவான வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் அப்பகுதியை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தியபோதே , நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

புலிகளின் தயாரிப்பான டாங்கி எதிர்ப்பு நிலக்கண்ணி வெடிகள் , அம்மான் – 3, 23 மிதிவெடிகள் , 3 கிளைமோர் குண்டுகள் , ரி 56 ரக துப்பாக்கி மெகஸின்கள், துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் அம்பிகை நகர் பகுதியில் புலிகளின் தயாரிப்பான அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி நகைகள் கொள்ளை!
Previous articleதாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Next articleவிவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்ததாக புகார்: கங்கனா மீது வழக்குப்பதிவு