Home Astology இன்றைய ராசி பலன் – 24.11.2021

இன்றைய ராசி பலன் – 24.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 08 ஆம் தேதி நவம்பர் 24,2021 புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 03.04 மணி வரை அதன் பின் சஷ்டி திதி.புனர்பூசம் மாலை 04.49 அதன் பின் பூசம் நட்சத்திரம். சந்திரன் இன்று மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் இருந்து பயணம் செய்கிறார். பெற்றோர்களால் திடீர் மருத்துவ செலவுகள் வரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் வருமானம் வரும். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பெண்களுக்கு வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

மிதுனம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். திடீர் வருமானம் அதிகரிக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன்- 27/06/2021, கடக ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

கடகம்

சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

சிம்மம்

சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருப்பவர்களின் உதவியால் சிரமங்கள் நீங்கும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு சுகமான நாள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நன்மைகள் நடைபெறும்.

READ MORE >>>  தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

தனுசு

சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சை குறைப்பது உத்தமம்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். நிதி நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். இன்று உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் நன்மைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous article15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரியின் கணவர்!
Next articleதாயுடன் நீராடச் சென்ற 4 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு