Home Entertainment இசை நிகழ்ச்சியின்போது ரசிகரின் முகத்தில் சிறுநீர் கழித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகி!

இசை நிகழ்ச்சியின்போது ரசிகரின் முகத்தில் சிறுநீர் கழித்து பரபரப்பை ஏற்படுத்திய பாடகி!

இசை நிகழ்ச்சியொன்றின் மேடையில் வைத்து ரசிகர் ஒருவரின் முகத்தில் பாடகி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிராஸ் எகெய்ன்ஸ்ட் எனும் அமெரிக்க இசைக்குழுவின் பிரதானப் பாடகியான சோபியா யுரிஸ்டா என்பவரே இவ்வாறு முகம்சுழிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள டேடோன்னா நகரில்  வெல்கம் டூ ரொக்வில்லே எனும் இசை விழா கடந்த 11 ஆம் திகதி 14 ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிராஸ் எகெய்ன்ஸ்ட் குழுவினர் கடந்த 11 ஆம் திகதி இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் மத்தியில், மேடையில் பாடிக்கொண்டிருந்த பிரதான பாடகி சோபியா யுரிஸ்டா (36), தனக்கு அவசரமாக கழிவறைக்குச் செல்லவேண்டியுள்ளதாகவும், இதற்கு மேல் தன்னால் காத்திருக்க முடியாது எனவும் அறிவிப்புச் செய்தார்.

அப்படி கூறிவிட்டு அவர் கழிவறைக்குச் செல்லவில்லை. மாறாக, ரசிகர்கள் மத்தியிலிருந்த ஆண் ரசிகர் ஒருவரை மேடைக்கு இழுத்து, அவரை மேடையில் மல்லாக்காக கிடத்தினார். அதன்பின் தனது காற்சட்டையை தொடைவரை கீழிறக்கிவிட்டு, அந்த ரசிகரின் முகத்திலும் தலையிலும் சிறுநீர் கழித்தார் சோபியா.

இச்செயல் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக பெண்ணொருவர், அவசரசேவை இலக்கத்துக்கு அழைப்பு விடுத்து பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடும் செய்தார்.

ஆனால், அப்பெண்ணுடன் மீண்டும் பொலிஸார் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அப்பெண் பதிலளிக்கவில்லை என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாடகி சோபியாகவுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படவில்லை. புளோரிடா மாநில சட்டங்களின்படி. இத்தகைய நடவடிக்கைக்கு ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது 1,000 டொலர் அபராதம் விதிக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE >>>  ஒரேயொரு கோவிட் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதால் முழுமையாக முடக்கப்படும் நாடு

சோபியா சிறுநீர் கழித்தபோது, குறித்த ரசிகர்கள் எதிர்ப்புக்காட்டவில்லை. அவர் முறைப்பாடு எதுவும் செய்ததாகவும் தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவத்தின் போது சோபியா தொடர்ந்தும் பாடிக்கொண்டிருந்தார்.  சோபியாவின் செயலை சமூகவலைத்தளங்களில் பெரும் எண்ணிக்கையானோர் கண்டித்தனர்.

பாடகி சோபியாவின்  மேற்படி நடத்தையை தான் மன்னிக்கவில்லை என இசை நிகழ்ச்சி நடைபெற்ற டேட்டோனா இன்டர்நெனஷனல் ஸ்பீட்வே எனும் கார் பந்தய அரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்படி நடவடிக்கைக்காக தான் மன்னிப்பு கோருவதாக பாடகி சோபியா யுரிஸ்டா சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleபடகு விபத்தையடுத்து தௌபீக் MP வீட்டின் மீது தாக்குதல்!
Next article15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சகோதரியின் கணவர்!