Home Accident News யாழில் இலக்கத்தகடற்ற பஸ் ஏற்படுத்திய விபத்து!

யாழில் இலக்கத்தகடற்ற பஸ் ஏற்படுத்திய விபத்து!

யாழ்.தாவடியில் இலக்கத்தகடற்ற பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில் பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாவடி சந்தியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிறில் சென்று கொண்டிருந்த மாணவி உட்பட இருவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் இளம் யுவதி தீடிரென உயிரிழந்ததால் பரபரப்பு!
Previous articleஓவியர் சாந்தனுவை காதலிக்கிறேன்: சுருதிஹாசன்!
Next articleபடகு விபத்தையடுத்து தௌபீக் MP வீட்டின் மீது தாக்குதல்!