Home cinema news ஓவியர் சாந்தனுவை காதலிக்கிறேன்: சுருதிஹாசன்!

ஓவியர் சாந்தனுவை காதலிக்கிறேன்: சுருதிஹாசன்!

சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் கமல்ஹாசன் மகளாக சினிமாத்துறைக்கு வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்தியேகமான இடத்தை சம்பாதித்துக் கொண்டவர் நடிகை சுருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

EXCLUSIVE: Santanu Hazarika says he's close to Shruti Haasan; Denies  commenting on their rumoured relationship | PINKVILLA

பிரபல நடிகை மந்திரா பேடி தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சுருதிஹாசன் பங்கேற்றார். அப்போது மந்திராபேடி கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Shruti Haasan gets cosy with boyfriend Santanu Hazarika as they get locked  down – view pics

சுருதிஹாசன் கூறும்போது, ‘‘நான் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிக்கிறேன். எங்கள் இருவருக்கும் பெயிண்டிங், கிராபிக்ஸ், நாவல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒருமுறை எனது சிநேகிதிக்கு அவர் ஒரு பெயிண்டிங்கை பரிசாக கொடுத்தார். அதன்பிறகு எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் ஒன்லைனில் உரையாட ஆரம்பித்தோம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பிறகு காதலிக்க ஆரம்பித்தோம்.

Shruti Haasan gets cosy with boyfriend Santanu Hazarika as they get locked  down – view pics

நான் இதற்கு முன் அனேகமான விடயங்களை மறைத்து வைத்தேன். நீண்டகாலம் சிங்கிளாகவே இருந்தேன். நானும் சாந்தனுவும் திருமணம் செய்து கொள்வோமோ, இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் என் காதலர் பற்றிய விடயங்களை மறைத்து வைத்தால் அவரை அவமானப்படுத்திய மாதிரி ஆகிவிடும். நான் எந்த மாதிரியான குணநலன்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேனோ அதில் 80 சதவீதம் வரை சாந்தனு ஹசாரியிடம் உள்ளது” என்றார்.

Image

Image

Image

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நான்கு வயதில் ரீல் ஜோடியாக நடித்த குட்டீஸ்… 25 வயதில் ரியல் ஜோடியாக மாறிய சுவாரசியம்!!..
Previous articleபடகுப் பாதைக்கு சட்டவிரோதமாக அனுமதித்தது யார்? சபையில் இம்ரான் மஹ்ரூப் ஆவேசம்,
Next articleயாழில் இலக்கத்தகடற்ற பஸ் ஏற்படுத்திய விபத்து!