Home Ampara news அம்பாறையில் 10 கஜ முத்துக்களோடு மூவர் கைது!

அம்பாறையில் 10 கஜ முத்துக்களோடு மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் மூவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை வரிப்பத்தான்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதான பகுதியில் இச்சட்டவிரோத செயற்பாடு இடம்பெறவுள்ளதாக கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று (21) மாலை கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய சந்தேக நபர்கள் முயன்றுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீரவின் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி வேவிட விதான வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படையின் தலைமையதிகாரி மெரில் டயஸ் தலைமையிலான அதிரடிப்படையினர் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்போது 45 ,50 வயது மதிக்கத்தக்க மல்வத்தை பகுதியை சேர்ந்த இருவரும் வரிப்பத்தான்சேனையை சேர்ந்த மற்றொருவருமாக மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மூவர் மற்றும் சான்று பொருட்கள் இறக்காமம் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சினிமா பாணியில் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர் செய்த சாகச செயல்!
Previous articleசட்டவிரோதமான முறையில் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!
Next articleஇன்றைய ராசி பலன் – 23.11.2021