Home Local news சட்டவிரோதமான முறையில் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

சட்டவிரோதமாக வாகனங்களை தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மூவர் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு , கடுவலை வீதி , மாலம்பே பிரதேசத்தில் போலியான இலக்க தகடுகளை கொண்ட வாகனத்துடன் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இவ்வாறு சட்ட விரோதமாக வாகனங்களை வைத்திருந்த மேலும் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 மற்றும் 35 வயதுகளையுடைய மாலம்பே மற்றும் போகந்தர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை கடுவலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஜனவரி 3 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கான நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டு ஒவ்வொருவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  5 கிராம் ஹேரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்
Previous articleஆபாச படங்களைப் பார்த்து தனது 5 வயது தங்கையிடம் பரீட்சித்த 14 வயது அண்ணன்!
Next articleஅம்பாறையில் 10 கஜ முத்துக்களோடு மூவர் கைது!