Home Astology இன்றைய ராசி பலன் – 22.11.2021

இன்றைய ராசி பலன் – 22.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 06 ஆம் தேதி நவம்பர் 22,2021 திங்கட்கிழமை. திருதியைத் திதி இரவு 10.27 மணி வரை அதன் பின் சதுர்த்தி, மிருகஷீரிடம் பகல் 10.43 அதன் பின் திருவாதிரை நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திரன் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைக்கு மகத்தான நாளாக அமைந்துள்ளது. அற்புதம் மிகுந்த இந்த நாளில் ஆன்மீக எண்ணம் மேலோங்கும். மாற்றங்கள் நிறைந்த நல்ல நாள், இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். அரசு வழியில் ஆதாயங்கள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் நன்மை உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் சந்திரன் பயணம் செய்கிறார். புதிய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். இன்று உங்களுக்கு திடீர் பண வரவு வரும். சுப காரியங்கள் வெற்றிகரமாக முடியும் பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்களுக்கு அதிகாலையிலேயே சுப செய்திகள் வீடு தேடி வரும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகத்தால் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பேசலாம்.

READ MORE >>>  இன்றைய ராசி பலன் - 01.10.2021

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திரன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார்.
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார்.
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் குடும்பத்தில் சுப செய்திகள் வந்து சேரும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக . பணவரவு அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த சிக்கல்கள் நீங்கும். இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வங்கி சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.

READ MORE >>>  சிம்ம ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று

விருச்சிகம்

சந்திரன் இன்று எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமும் கவனமும் தேவை. சுபகாரிய முயற்சிகளைத் தள்ளி வைக்கவும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். செய்யும் தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவுகள் வரும். இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கடன் பிரச்சினைகள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் இன்று பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளையும் உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

READ MORE >>>  இன்றைய தினம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும் . பழைய கடன்கள் வசூலாகும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleபோரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர அரசு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை.
Next articleபுலம்பெயர் தமிழர்களுக்கு புத்திமதி கூறிய நாமல்