Home Local news போதையில் ஆட்டம்போட்ட இளைஞர்கள் கைது!

போதையில் ஆட்டம்போட்ட இளைஞர்கள் கைது!

பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 12 இளைஞர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – பெலேன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த களியாட்ட நிகழ்வுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் வந்திருந்ததாகவும், களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 6 பேரிடமிருந்து 1695 மில்லி கிராம் கொக்கைன், இருவரிடமிருந்து 1250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தனது சொந்த மகளை திருமணம் செய்தவர் சிறையில்!
Previous articleபட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கைவரிசை;
Next articleமுற்சக்கரவண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு