Home Accident News மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை சிறுத்தோப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

முச்சக்கர வண்டியொன்றின் மீது டிப்பர் வாகனமொன்று மோதியமையினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளுடன் ஏற்படவிருந்த திடீர் விபத்தை தடுப்பதற்காக முச்சக்கர வண்டி சாரதி மறுபக்கம் முச்சக்கர வண்டியை திருப்பும் போது தலை மன்னார் பகுதியில் இருந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தலைமன்னார் பாடசாலை மாணவர்கள் சென்ற பேருந்தை பந்தாடிய புகையிரதம்
Previous articleபாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட 17 வயது மாணவி எழுதிய உருக்கமான கடிதம்.
Next articleஇன்றைய ராசி பலன் – 21.11.2021