Home Indian news ஆடைக்கு மேல் தொடுவதை வல்லுறவாக கருத முடியாது: உச்சநீதிமன்றம்!

ஆடைக்கு மேல் தொடுவதை வல்லுறவாக கருத முடியாது: உச்சநீதிமன்றம்!

ஆடைக்கு மேல் தொடுவதை பாலியல் வல்லுறவாக கருத முடியாது என்ற மும்பை மேல்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மகா­ராஷ்­டிரம் மாநி­லத்தின் நாக்பூர் மாவட்­டத்தைச் சேர்ந்த சதீஸ் என்பவர் 12 வயது சிறு­மியைத் தனது வீட்­டுக்கு அழைத்துச் சென்று அவருக்குச் உணவுப் பொருட்­களைக் கொடுத்து, பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்­ற­தாகக் குற்­றச்­சாட்டு எழுந்­தது. இந்­த­வ­ழக்கில் தனது ஆடைகளைக் களைய முயன்ற அந்த நபர், மார்ப­கங்­களை அழுத்தி பாலியல் சீண்­டல்­களில் ஈடுபட்டார் என்று பாதிக்­கப்­பட்ட சிறுமி நீதி­மன்­றத்தில் வாக்­கு­மூலம் அளித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சதீசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ், ஐபிசி 354ஆவது பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, குற்றவாளி மும்பை மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை மேல்நீதிமன்ற நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலா கடந்த 19ஆம் திகதி குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த நபரைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார்.

தனது தீர்ப்பில் 12 வயதுச் சிறுமியின் ஆடைகளைக் களையாமல், அந்தச் சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பதும், தொடுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது. இது போக்சோ சட்டத்திலும் வராது. ஐபிசி 354ஆவது பிரிவில் மட்டுமே வரும். அதற்குக் குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை மட்டுமே வழங்கலாம்.

12 வயதுச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் அந்த செயலில் ஈடுபட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அந்தச் சிறுமியின் மேல் ஆடைக்குள் கையை நுழைத்தாலும் அது பாலியல் வல்லுறவில் வராது. பாலியல் வன்கொடுமை என்பது, ஆடைகள் இன்றி, உடலோடு உடல் தொடர்பு கொள்வதுதான். ஆதலால் அந்தச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் தொட்டதால் அது பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. ஆதலால், அந்த நபரை விடுவிக்கிறேன். அவர் ஏற்கெனவே போதுமான அளவு சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார்” என்று தீர்ப்பளித்தார்.

READ MORE >>>  விருப்பமில்லாத மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதில் தவறில்லை; நீதிமன்றம் உத்தரவு!

நாக்பூர் அமர்வு அளித்த இந்த தீர்ப்பு சர்ச்சைக்குரியதாக மாறியது. இதற்கு சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தன.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வல்லுறவு என கருத முடியாது என்ற மும்பை மேல்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleஇலவச குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான நடமாடும் சேவை:
Next articleமல்வானையிலுள்ள ஆடம்பர வீடு எனக்கு சொந்தமானதில்லை; பசில்.