Home Astology இன்றைய ராசி பலன் – 20.11.2021

இன்றைய ராசி பலன் – 20.11.2021

பிலவ வருடம் கார்த்திகை 04 ஆம் தேதி நவம்பர் 20,2021 சனிக்கிழமை. பிரதமைத் திதி மாலை 05.05 மணி வரை அதன் பின் துவிதியைத் திதி. ரோகிணி நட்சத்திரம் முழுநாள். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நல்ல செய்தி வீடு தேடி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க நல்ல நாளாகும். சுப காரியம் கைகூடி வரும். பெண்களுக்கு வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். திடீர் தனவரவு உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும்.

மிதுனம்

சந்திரன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுக்கு இன்றைய தினம் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் உண்டாகும். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரியவர்கள் ஆலோசனை பெற்று முதலீடு செய்தாதொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நல்லது.

READ MORE >>>  குருப்பெயர்ச்சி பலன்கள்- தனுசு ராசி

கடகம்

சந்திரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நிதி நெருக்கடிகள் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

சந்திரன் பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

சந்திரன் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரு நாட்களாக இருந்த பிரச்சினை நீங்கும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

துலாம்

சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமும் நிதானமும் தேவை.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 27.07.2021

விருச்சிகம்

சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று பணப்பிரச்சினைகள் குறையும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். தொழில் வியாபார வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி தேடி வரும். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் வீடு தேடி வரும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

READ MORE >>>  இன்றைய ராசிபலன் - 02/11/2021, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleதந்தையை கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை
Next articleலண்டனில் உயிரிழந்த இலங்கை தமிழ் குடும்பம்