Home Local news மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி விசமிகளால் உடைப்பு

மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி விசமிகளால் உடைப்பு

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் தூபி நேற்றிரவு இனம்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே புண்பட்டுள்ள தமிழர் மனங்களை மேலும் புண்படுத்தும் செயற்பாடாகவே இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

எம் இனத்திற்காக போராடி எமக்காக உயிர் நீத்த மறவர்கள் துயில்கொள்ளும் துயிலும் இல்லத்தின் இந்தத் தூபியினை உடைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ஏ9 வீதியில் வாகனம் விபத்துக்குள்ளானதால் மின்சாரம் தடைப்பட்டது!
Previous articleபெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்த நிலையில், மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Next articleவிசுவமடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்