Home Tech today வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வட்ஸ்அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

உலகளாவிய ரீதியில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மிகவும் பிரபலமான தொடர்பாடல் தளமான வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface மற்றும் ஏனைய அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் உள்ளதால், தற்பொழுது கணினிகளில் பயன்படுத்தும் வகையில் வட்ஸ்அப் பீசி (WhatsApp PC) என்ற செயலியை உருவாக்க மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Windowsக்காக வட்ஸ்அப் பீட்டா ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தாலும், விரைவில் Windows மற்றும் MacOSகாக மேம்படுத்தப்பட்ட வட்ஸ்அப் பிசி (WhatsApp PC) என்ற செயலி வெளியிடப்படவுள்ளதாகப் பிரபல இத்தாலிய இணையத்தளமான Aggiornamenti Lumia One வெளியிட்ட சில ஸ்கிரீன்ஷோட்கள் மற்றும் GIFகளை மேற்கோள்காட்டி GSMArena இணையத்தளம் தெரிவித்துள்ளது.

Windows 11 இன் theme ஆக உள்ள, transparent color panel உடன் வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த செயலியில், பயன்பாட்டை விட்டு வெளியேறியுள்ள போதிலும் notification கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய செயலி மூலம் கணினிகளில் விரைவாக வட்ஸ்அப்பை செயற்படுத்த முடியும் எனவும், டச் டிஸ்பிளேக்கு ஏற்ற வகையில் வரைதல் அம்சம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த செயலியில் வட்ஸ்அப் கணக்கு, அரட்டைகள், Notifications உட்பட 6 பிரிவுகள் அடங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இன்னும் நாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடு இருப்போம்? மரணத்தை கணிக்கும் கடிகாரம்!
Previous article90% பெண்கள் மட்டுமே வாழும் அதிசய தீவு:
Next articleஇன்றைய ராசி பலன் – 19.11.2021