Home cinema news ‘ஜெய்பீம் படத்திற்கு விருது வழங்கக்கூடாது’: மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம்!

‘ஜெய்பீம் படத்திற்கு விருது வழங்கக்கூடாது’: மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம்!

வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் முறையிட்டுள்ளது.

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வரும் காவலரின் வீட்டில் இடம்பெற்றிருந்த வன்னியர் சங்க நாட்காட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வன்னியர் சங்க அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், நஷ்ட ஈடு தர வேண்டும் என்று படக்குழுவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வன்னியர் சங்கம்

இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், தமிழ்நாடு தகவல் மற்றும் பொதுவிவகாரத் துறை செயலர் ஆகியோருக்கு வன்னியர் கடிதம் எழுதியுள்ளது.

அதில், “அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னமாக பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவரின் பெயர்.

ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம் மற்றும் குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர வன்னியர் சங்கம் தொடரவுள்ளது. எனவே, ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ தேசிய விருது போன்ற விருது வழங்கவோ கூடாது என கோரிக்கை வைக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தின் அந்த காட்சி – கொந்தளிக்கும் ஒட்டர் சமூகம்

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  முதலிரவு பற்றி பேசியதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை!
Previous articleதொடரும் ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை! சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக்!
Next article90% பெண்கள் மட்டுமே வாழும் அதிசய தீவு: