Home cinema news ஜெய்பீம் திரைப்படம்: நடிகர் சூர்யாவிற்கு யார் யார் ஆதரவு? எதிர்ப்பு?

ஜெய்பீம் திரைப்படம்: நடிகர் சூர்யாவிற்கு யார் யார் ஆதரவு? எதிர்ப்பு?

நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாகி தமிழகமெங்கும் மிகுந்த பரபரப்பு உருவாகியுள்ள திரைப்படம் ஜெய்பீம். சந்துரு கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவரையும் வியக்கவைத்தது.

ஜெய் பீம்

இருப்பினும் ஜெய்பீம் படத்திற்கு வன்னியர் சமூகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜெய்பீம் திரைப்படத்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் என பலரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் 'ஜெய்பீம்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகர் மணிகண்டன் ஏற்று நடித்த 'ராஜாகண்ணு' கதாபாத்திரமும் அவருடைய இயல்பான நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சில தரப்பு மக்களிடையே எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் வேலையில், அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நடிகர் சந்தானம்:

ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை குறைத்து சொல்வது சரியல்ல திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையல்ல என்று ஜெய்பீம் படத்திற்கு எதிரான கருத்தினை கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா:

ஒவ்வொரு அரசியல்வாதி வாசலிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்ல காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது என்று இயக்குனர் பாரதிராஜா ஜெய்பீம் படத்திற்கு ஆதரவாக கூறியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை:

ஜெய்பீம் படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்; இருப்பினும் எந்த ஒரு சமுதாயத்தையும் காயப்படுத்தாமல் உருவாக்கியிருக்கலாம் என்று ஆதரவாகவும் எதிராகவும் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா:

எந்த ஒரு குறிப்பிட்ட தனி நபரையோ சமுதாயத்தை அவமதிக்கும் நோக்கம் ஒரு போதும் எனக்கும் எனது படக்குழுவினருக்கு இல்லவே இல்லை என்று கூறியுள்ளார்.

ஜெய்பீம் படத்துக்கு நீங்கள் தரும் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்கிறது.

எனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி என்று சூர்யா கூறியுள்ளார்.

ஜெய்ஹிந்த் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாளுக்கு 15 லட்ச ரூபாய் வங்கி வைப்பு நிதி வழங்கினார் சூர்யா.

READ MORE >>>  இதுவரை யாரையும் காதலிக்கவில்லை: ராஷி கன்னா!
நடிகர் சத்யராஜ்:

சமூகநீதி பற்றி பேசும் நடிகர் ஒருவருக்கு கலைத்துறை சேர்ந்த கலைஞர்கள் துணை நிற்க வேண்டும் என்று சத்யராஜ் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யா அவருக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார்.

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு

தொடரும் ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை! சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக்!

‘ஜெய்பீம்’ : ராஜாகண்ணுவின் மனைவிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முடிவு – நடிகர் சூர்யா

‘ஜெய் பீம்’ மணிகண்டன் பேட்டி: நிஜ செங்கேணியை சந்திக்க வேண்டாம் என இயக்குநர் கூறியது ஏன்?

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous article‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!
Next articleஇன்றைய ராசி பலன் – 18.11.2021