Home cinema news ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஆனால், படத்தில் வன்னியர்கள் குறித்து வேண்டுமென்றே தவறான குறியீடு வைத்ததாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் குற்றம்சாட்டி வருகின்றன.

சர்ச்சைக்குரிய அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்ட பின்னரும் சூர்யா நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே ‘ஜெய்பீம்’ படம் குறித்த சர்ச்சையால் மயிலாடுதுறையில் ஓடிக்கொண்டிருந்த ‘வேல்’ திரைப்படத்தை பாமகவினர் நிறுத்தினர்.

அத்துடன் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ஆயுதப்படையை சேர்ந்த காவலர்கள் 5 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பினாலும் பல ரசிகர்கள், திரைத்துறையினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இப்படத்திற்கும் சூர்யாவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நீதிபதி முன் கதறும் நடிகை மீரா மிதுன்!
Previous articleதமிழர் பகுதிகளில் தொடரும் கொடூரங்கள்!
Next articleஜெய்பீம் திரைப்படம்: நடிகர் சூர்யாவிற்கு யார் யார் ஆதரவு? எதிர்ப்பு?