Home cinema news தொடரும் ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை! சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக்!

தொடரும் ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை! சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக்!

சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் சில தரப்பு மக்களிடையே எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் வேலையில், அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த நவ.2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’.

இருளர் இன மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும்படியாக உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு

தொடரும் ‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை! சூர்யாவிற்கு ஆதரவாக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘WeStandWithSuriya’ ஹேஷ்டேக்!

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,

சூர்யாவுக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு படத்தயாரிப்பு நிறுவனம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். WeStandWithSuriya

அவருக்கு பதில் அளித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், காவல்துறை தாக்கியதால் மறைந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதே வேலையில் வன்னியர் குலத்தை தவறாகச் சித்தரிப்பதாக சில தரப்புகளிடமிருந்து எதிர்ப்புகலும் எழுந்தன.WeStandWithSuriya

இதனைத் தொடர்ந்து சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு சூர்யா பதிலும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது.

READ MORE >>>  ஜெய்பீம் படத்தின் அந்த காட்சி - கொந்தளிக்கும் ஒட்டர் சமூகம்

இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக டுவிட்டரில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெய்பீம் படத்தின் அந்த காட்சி – கொந்தளிக்கும் ஒட்டர் சமூகம்

சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு

 

ஏனைய தளங்களிற்கு செல்ல..

Previous articleமகன் இறந்து நான்கு நாள்களில் தாயும் உயிரிழந்த சோகம்.
Next article‘ஜெய்பீம் படத்திற்கு விருது வழங்கக்கூடாது’: மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம்!